பத்ரகாளியம்மன் கோயிலில் எருமை கிடாய் வெட்டி படையல்...

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகையின் முக்கிய நிகழ்வான எருமை கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பத்ரகாளியம்மன் கோயிலில் எருமை கிடாய் வெட்டி படையல்...

ஈரோடு | அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கோவிலாகும். நடப்பாண்டு கோவில் குண்டம் திருவிழாவிற்கான பூச்சாட்டுதல் கடந்த 16ம் தேதி தொடங்கி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவில் பண்டிகையின் முக்கிய நிகழ்வான மகிஷாசுரமர்த்தனம் என்கிற எருமை கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி முடிந்து அம்மன் வாக்கு கொடுத்ததும் எருமை கிடாயை வெட்டி அம்மனுக்கு பலி கொடுத்து குண்டம் அருகே மூடப்பட்டது.

இவ்வாறு செய்வதால் விழா எவ்வித தங்கு தடையும் இன்றி நடைபெறும் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் பத்ரகாளியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கோயில் நிலம் ஆக்கிரமிப்பை... உடனடியாக அகற்ற வேண்டும்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!