தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது.
இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் மாமிச உண்ணிகள் புலி சிறுத்தை, கருசிறுத்தை கால் தடங்கல், நக கீறல்கள், எச்சங்கள் வைத்து கணக்கு எடுக்கும் பணியும் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதையிலும் காட்டுயானை, மான், பறவை, தாவர இனங்கள் கணக்கெடுக்கும் பணியும் நடைப் பெற்று வருகிறது.
நேற்று துவங்கி 7 நாட்கள் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு இறுதியாக பணி முடிவுற்று தேசியப் புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட நவமலை பகுதியில் வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | புலித்தோலை விற்க முயன்ற 4 பேர் கைது... குமரியில் பரபரப்பு...