ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்...

நாகப்பட்டினத்தில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்...
Published on
Updated on
1 min read

நாகை | மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செண்பகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1, டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 30 பெட்டிகளில் இருந்த சுமார் ஆயிரம் கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செண்பகம் மகன் சபரிநாதன் செல்லூரை சேர்ந்த சுரேஷ் அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com