ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை செய்யவுள்ள காவல்துறை...!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை செய்யவுள்ள காவல்துறை...!!

Published on

மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவர் திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேனாம்ப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.  வினால்க் சங்கர் நவாலியிடம் 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவிடம் விசாரணை:

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் எவ்வளவு நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் நேரில் விசாரணை செய்ய உள்ளனர்.  மேலும் திருடப்பட்ட நகைகளின், வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர்.  அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால்,  ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வீட்டுக்கு செல்லும்போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும்  திட்டமிட்டுள்ளனர்.  போலீசில் புகார் அளித்தபோது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கியிருந்தார். அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள்.  நீதிமன்றத்தில் ஒப்படைக்க  திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com