உதகையில் உலாவரும் சிறுத்தைகள்... வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை!!!

உதகையில் உலாவரும் சிறுத்தைகள்... வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை!!!
Published on
Updated on
1 min read

உதகை தமிழக விருந்தினர் மாளிகை அருகே அமைந்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு இரவில் உலா வந்த இரண்டு சிறுத்தைகள்.  அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தைகளின் நடமாட்டம் பதிவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியேறும் வனவிலங்குகள்:

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் இருந்து அண்மைக்காலமாக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புகளின் அருகே உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

சிறுத்தைகள் உலா:

அதேபோல் உதகை அருகே உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளின் அருகே சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்டும் குடியிருப்புகளில் உள்ள செல்லப் பிராணிகளை வேட்டையாடி வருகின்றன.  சிறுத்தைகள் உலா வரும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

கோரிக்கை:

இந்நிலையில் தமிழகம் விருந்தினர் மாளிகையில் தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com