ஈபிஎஸ் கண் கண்ணாடி அணிய வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர்.... காரணம் என்ன?!!

ஈபிஎஸ் கண் கண்ணாடி அணிய வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர்.... காரணம் என்ன?!!

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்  வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முடிவடையும் பிரசாரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வருகின்ற 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடையவுள்ளது.  இதனால் போட்டியிடும் அரசியல்  கட்சியின் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

வாக்கு சேகரித்த முதலமைச்சர்:

அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் திறந்த வேனில் மக்கள் மத்தியில் பேசிய அவர்,  அரசின் இரண்டாண்டு கால சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். 

மறக்கவில்லை:

தேர்தல் வாக்குறுதிகள் மிச்சமிருப்பதை நான் மறுக்கவில்லை என்று கூறிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்  வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.. 

ஈபிஎஸ்க்கு பதில்:

பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி தலைவரான ஈபிஎஸ் வாக்கு சேகரித்து வரும் நிலையில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் அரசு நிறைவேற்றி வரும்  பல்வேறு நல்ல திட்டங்களை எதிர் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை போலும் எனவும் எனவே கண்ணாடி அணிந்து கொண்டு அரசின் செயல்பாடுகளையும் நலத்திட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் நையாண்டி விதமாக பதிலளித்துள்ளார்.

வெற்றி பெற..:

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்த முதலமைச்சர் எதிர்க்கட்சியை டெப்பாசிட் இழக்க செய்ய வேண்டும் எனவும் மக்களைக் கேட்டு கொண்டுள்ளார்.

இதையும் படிக்க:   உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர்கள்... எதற்காக?!!