நானே உன் மகன்.... தைப்பூச தீர்த்தவாரி.... வரலாறு!!

நானே உன் மகன்.... தைப்பூச தீர்த்தவாரி.... வரலாறு!!
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் முக்கியமான தீர்த்தவாரிகளில் ஒன்று தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி.

குழந்தை வரம் வேண்டி:

திருவண்ணாமலை அமைந்துள்ள பகுதி அண்ணா நாடு என்று அழைக்கப்பட்டது.  இந்தப் பகுதியை வல்லாள மகாராஜா ஆண்டு வந்து அண்ணாமலையாரின் தீவிர பக்தராக இருந்து வந்ததுடன் குழந்தை பாக்கியம் வேண்டி அண்ணாமலையாரை தினந்தோறும் தனது மனைவியுடன் சென்று குழந்தை வரம் கேட்டு வேண்டி வந்தார்.

நானே உன் மகன்:

ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய அண்ணாமலையார், இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்றும் என்னையே மகனாக பாவித்து நானே உனது மகன் என்று கூறியதாகவும் அதன்படி மன்னர் அண்ணாமலையாரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் அரசாட்சி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈசானிய குளம்:

இந்நிலையில் பூச நட்சத்திர தினமான இன்று அண்ணாமலையார் ஈசானிய குளக்கரைக்கு தீர்த்தவாரிக்கு சென்றபோது போர்க்களத்தில் வல்லாள மகாராஜா தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அண்ணாமலையாருக்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் மேளதாளங்கள் இல்லாமல் தீர்த்தவாரிக்கு சென்ற அண்ணாமலையார் கோவிலுக்கு திரும்பினார்.

தைப்பூசம்:

முன்னதாக ஈசான்ய குளக்கரையில் சூலத்திற்கு பால்,தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மூன்றுமுறை ஈசான்ய குளத்தில் சூலம் மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com