தென்காசி | சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் ஒரு மணி நேரம் காற்றுடன் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கே வி முத்துசாமிபுரம் வடக்கு ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஏத்தன் ரஸ்தாலி சக்கை உள்ளிட்ட வாழை மரங்கள் காற்றின் வேகத்தில் ஈடுகொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாகக் விழுந்தன.
இதனால் பூத்து கொலை தள்ளி நின்ற வாழைக்குலைகள் முழுவதும் மண்ணில் சரிந்து விழுந்து நாசமானது இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டிய அதிகாரிகள்...