அரசு மதுபான ஊழியருக்கு கத்தி குத்து...

அரசு மதுபான கடை ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மதுபான ஊழியருக்கு கத்தி குத்து...
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி | கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகமாணிக்கம் 40 வயது இவர் கோவை சாலையில் உள்ள முள்ளுபாடி அரசு மதுபான கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று, (செவ்வாய்) இரவு வழக்கம் போல் பணி முடித்து இரவு 11 மணி அளவில் கடையிலிருந்து  பிரதான சாலைக்கு வரும் வழியில் இரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் நாகமாணிக்கத்தை  பின்தொடர்ந்து வழி மறித்து மிரட்டி கத்தியால் குத்தியுள்ளனர்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர். பலத்த காயமடைந்த நாகமாணிக்கம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் அரசு மதுபானகடை ஊழியரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சமூக விரோதிகளிடமிருந்து அரசு மதுபான கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் அரசு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

தொடர்ந்து அரசு மதுபான கடை ஊழியர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் காவல்துறை, மற்றும் அரசு டாஸ்மாக  ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com