செங்கல்பட்டு : மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் கிருத்திகா 12 அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி. 5ம் தேதி அவுரி மேடு பகுதியில் உறவினர் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். மின் கம்பம் முழுதும் சேதமடைந்திருந்ததால் அடிப்பகுதி முறிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது.
இதில் சிறுமிக்கு பலத்தை காயம் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி 14ம் தேதி உயிரிழந்தார்.
மேலும் படிக்க | ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு...
பிரேத பரிசோதனை முடிந்து 15ம் தேதி மாலை 6:00 மணியளவில் உறவினர்களால் சித்திரவாடி மயானத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சூரிய கிரகணம் என்பதால் இரவு மயானத்தில் பூஜை செய்து சிறுமியின் தலையை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
காலை வழியே சென்ற கிராமத்தினர் மயானத்தில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சைபழம்,மஞ்சள்தூள், குங்குமம் போன்ற பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | “என்னையா கேள்வி கேக்கற?”- காவலரை தாக்கிய போதை ஆசாமிகள் கைது...
இதையடுத்து சித்தாமூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் மயானத்தில் இருந்த உடலை தோண்டி எடுத்து பூஜை செய்துவிட்டு தலையை எடுத்து சென்று விட்டதாக புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து பிரேதத்தை பரிசோதித்த போது சிறுமியின் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்தனர். பின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மறு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சிறுமியின் தலையை எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.