நகைக் கடையில் திருடிய 3 சிறுவர்கள் கைது...

நகைக் கடையில் திருடிய 3 சிறுவர்கள் கைது...
Published on
Updated on
1 min read

சென்னை | தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் நகைக்கடையில் கொள்ளை வழக்கு குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த கொள்ளை வழக்கில் 3 சிறுவர்கள் கைதாகி உள்ளனர். அசாமில் இருந்து வேலைக்காக வந்தவர்கள். பெட்டி கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.

ப்ளுஸ்டோன் நகை கடையின் மேல் மாடியில் இருந்த லிஃப்ட் ஆப்ரேட் செய்யும் இடத்தின் துவாரம் வழியாக ஒரு சிறுவன் உள்ளே சென்றுள்ளான். சிசிடிவி மூலம் தெரிய வந்தது.

விரைவாக கண்டுபிடித்து சேலையூர் காவல் உதவி ஆணையர் தனிப்படை கைது செய்துள்ளது. சுமார் ரூ. 1.5  கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கு ரூ. 3 கோடிக்கு மேல் தங்க நகைகள் இருந்த நிலையில், பெரும்பாலான தங்க நகைகள் தப்பியது. ஆனால், பார்வைக்கு வைக்கப்பட்ட தங்க நகைகள் மட்டுமே கொள்ளை போனது.

கடந்த ஜூன் மாதம் தான் இந்த கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அலாரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த அலராம் ஒலித்தது. அது கடையின் மேலாளருக்கே கேட்டுள்ளது. உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.

கடைக்கு நேரில் வந்து பார்த்த பிறகே காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். அலர்ட் கிடைத்தது காலை 4.30 மணிக்கு. 6 மணிக்கு தான் போலீசுக்கு சொன்னார்கள். உடனடியாக போலீஸ் செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்துள்ளோம்.

கொள்ளையர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை சென்று கொண்டிருக்கிறது. எல்லா மாநிலத்தவர்களும் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com