மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அடித்தே கொலை செய்த குடும்பம்...

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, குடும்பமே சேர்ந்து அடித்தே கொலை செய்த சம்பவம், நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அடித்தே கொலை செய்த குடும்பம்...
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினம்: திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் ஐயர் கோட்டபாடியை சேர்ந்தவர் அரவிந்தன். 50 வயதான இவருக்கு செல்வி என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

ஊதாரித்தனமாய் சுற்றித் திரிந்த குடும்பத்தலைவன்

ஏற்கெனவே குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விடுதலையான அரவிந்தன், குடித்து விட்டு ஊதாரித் தனமாய் சுற்றித் திரிந்ததோடு, வீட்டில் உள்ள பொருட்களை விற்று வந்திருக்கிறார். 

போதையில் மகளிடம் தகாத முறையில் நடந்த காமுகன்

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று, (அக். 16), காலை மதுபோதையில் வந்த அரவிந்தன், பெற்ற மகள் என்றும் பாராமல் தனது 15 வயது மகளை தகாத முறையில் சீண்டியிருக்கிறார். இதனை அறிந்த குடும்பத்தினர், போதையில் பெற்ற மகள் கூட தெரியவில்லையா? என ஆத்திரத்தில் அரவிந்தனை கேள்வி கேட்டதும், கோபத்தில் அவர்களை வீட்டை விட்டு அவர் துரத்தியுள்ளார்.

தட்டிக் கேட்ட மனைவி மாமியாரை அடித்து விரட்டிய கொடூரம்

பின், செல்வியுடன் அரவிந்தனின் குடும்பத்தினர், திருவாரூரில் உள்ள தனது அக்கா சரோஜா வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு நடந்ததைக் கூறிய போது, மகள் கூட தெரியாமல் போதையும் இச்சையும் தலைக்கேறியவர் இனி உயிருடனே இருக்கக் கூடாது என அவரை கொலை செய்ய அலோசனை நடத்தியுள்ளனர்.

மனிதமில்லாத உயிர் எதற்கு?

இதனைத் தொடர்ந்து, அன்று இரவே, அரவிந்தனின் மனைவி செல்வி, மகன் மாதவன், அக்கா சரோஜா மற்றும் அவரது கணவர் தர்மராஜ் என மொத்தம் 6 பேர், ஐயர்கோட்டபாடியில் உள்ள வீட்டுக்கு சென்று, வாசலில் உறங்கிக் கொண்டிருந்த அரவிந்தனை உருட்டுக்கட்டையால் தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

மனைவி, மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற திருக்கண்ணபுரம் போலீசார் அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  கொலை செய்த செல்வி மற்றும் குடும்பத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவி செல்வி, மகன் மாதவன் மற்றும் அவர் குடும்பத்தோர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசுர வதம் செய்த குட்ம்பத்தை போற்றுவதா? தூற்றுவதா?

நள்ளிரவில், குடும்பமே சேர்ந்து தனது மகளுக்காக நீதி கேட்டு, சட்டத்தை தன் கையில் எடுத்த குடும்பத்தினை பாராட்டுவதா, அல்லது ஒருவரை கொலை செய்து, தற்போது கதியின்றி தவிக்கும் அந்த பெண் குழந்தையின் நிலையை நினைத்து வருவ்துவதா என்ற கவலை அப்பகுதியில் சூந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com