சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்...! போக்ஸோவில் கைது செய்த போலீசார்...!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்...! போக்ஸோவில் கைது செய்த போலீசார்...!
Published on
Updated on
1 min read

மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வருகிறார். மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் சந்துரு, தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பல முறை அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை வீடியோவாக எடுத்துவைத்து அந்த சிறுமியை மிரட்டி அவரிடமிருந்து 118 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். நேற்று வழக்கம்போல் அவரை மிரட்டி ரூபாய் 50,000 கேட்டுள்ளார். பீரோவில் இருந்த 50 ஆயிரத்தை அந்த சிறுமி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பணம் காணாமல் போனதை அறிந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்க போகிறேன் என்று தந்தை மிரட்டியதும் நடந்தவற்றை அந்த சிறுமி  கூறி உள்ளார். அந்த சிறுமி கூறியதன் அடிப்படையில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் சந்துருவை போலீசார் கைது செய்து போக்ஸோ சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com