நீங்க யாருனு மக்களுக்கு தெரியும்..!! இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த முரசொலி!!!

நீங்க யாருனு மக்களுக்கு தெரியும்..!! இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த முரசொலி!!!
Published on
Updated on
2 min read

பாஜக தலைமைகளை சந்திக்க முயற்சித்து அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் அவர்களின் கைப்பாவையான ஆளுநரை சந்தித்து பேசினார் இபிஎஸ்.  அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் திமுக ஆட்சியின் ஊழல்களை ஆதாரத்துடன் தெரிவிக்கவே இந்த சந்திப்பு எனத் தெரிவித்திருந்தார்.

ஆளுநருடனான சந்திப்பில் திமுக மீதான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார் இபிஎஸ்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுக அதன் அதிகாரப்பூர்வமான செய்தித்தாளான முரசொலியில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.  அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்.

அதே ஆளுநரிடமா?:

தமிழை தமிழ்நாட்டை திராவிடத்தை திருக்குறளை தினமும் உள்நோக்கத்துடன் கற்பித்து பேசி வரும் அதே ஆளுநரிடம் மனு அளித்துள்ளார் இபிஎஸ்.  இதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது.  இந்த இபிஎஸ்ஸிற்கு தான் எந்த கொள்கையும் கிடையாதே.

இரட்டைக் கொள்கைகள்:

காலைப் பிடிப்பதும் காலை வாருவதும் தான் இபிஎஸ்ஸின் இரு கொள்கைகள்.  முதலில் ஆட்சியை பிடிக்க சசிகலாவின் காலைப் பிடித்த இபிஎஸ் பின்னர் அவரது காலை வாரினார்.  பின்னர் பாஜகவின் காலை பிடித்து ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.  தற்போது பாஜக பன்னீரை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கத் தொடங்கியதால் அதனுடைய காலை வாரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்.

சட்டம் ஒழுங்கு அதிமுக vs திமுக:

திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் கூறுவதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அவர் நினைத்து பார்க்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவம் ஊடகம் வழியாகவே தெரிந்து கொண்டதாக அப்போது பொய்யாக பேசினார் இபிஎஸ்.   அருணா ஜெகதீசன் விசாரணைக் குழுவில் அத்தனை உண்மைகளும் வெளியாகின.  அங்கு நடந்த அனைத்தும் உடனுக்குடன் அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெள்ள தெளிவாக விளங்குகிறது.

கொடநாடு வழக்கில் விசாரணை தொடங்கியதும் சட்டசபையில் சென்று கத்தியதை இபிஎஸ் மறந்தார் போலும்.  கேரளாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதும் அவர் இதயம் வேகமாக துடித்ததற்கான காரணம் என்ன என்பதும் அவருக்கு தான் தெரியும். 

இந்த அதிமுக ஆட்சியில் தான் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை சம்பவமும் கொள்ளை சம்பவமும் பல மர்மங்களும் அரங்கேறின.  அதை அனைத்தையும் மறந்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாக குற்றஞ்சாட்டுகிறார் இபிஎஸ்.

கனியாமூர் vs பொள்ளாச்சி:

கனியாமூர் சம்பவம் குறித்து பேசும் இபிஎஸ் பொள்ளாச்சி சம்பவத்தை மறந்து விட்டார் போலும்.  ஆனால் மக்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  ஆபாச படம் எடுத்து அதை வெளியிட்டவர்களை காப்பாற்ற இபிஎஸ் எடுத்த முயற்சிகள் அனைவரும் அறிந்த ஒன்றே.  திமுக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்திய பிறகே அதற்காக நடவடிக்கை எடுப்பது போல் அனைவருக்கும் காண்பித்து கொண்டார் இபிஎஸ்.  ஆனாலும் பல முயற்சி செய்து குற்றவாளிகளை காப்பாற்றியது அதிமுக.

இதுகுறித்து செய்தியாளர்கள் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ்ஸை கேட்டப்போது அப்படி ஒன்றும் இல்லை.  ஆதாரம் இருந்தால் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தார்.  பிரச்சினை பெரிதாக மாறியதால் சி.பி.சி.ஐ.டி கு வழக்கை மாற்ற நான்கு பேர் மீது மட்டும் அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது மட்டுமா..?:

இவர்களின் ஆட்சியில் இவை மட்டும் தான் நடந்தனவா.  இல்லை. இல்லை.  அமைதி வழியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தியதும் இவர்கள் தான்.  பெண் பொலீஸ் ஐ. ஜிக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு ஆட்சி நடத்தியதும் இவர்கள் தான்.  கஞ்சா கடத்தல் அதிகமாக நடந்ததும் இவர்கள் ஆட்சியில் தான்.  அமைச்சர்களும் போலீஸ் அதிகாரிகளும் ஊழல் பட்டியலில் இருந்ததும் இவர்கள் ஆட்சி காலத்தில் தான்.

இதை எல்லாம் பழனிச்சாமி மறந்திருக்கலாம்.  மக்களும் மறந்திருப்பார்கள் என அவர் நினைத்துக் கொண்டு இருக்கலாம்.  ஆனால் மக்கள் ஒருபோதும் எதையும் மறக்க மாட்டார்கள்.  இதுபோன்ற ஆட்சி நடத்திய பழனிச்சாமிக்கு மற்றவர்களை குறை சொல்லும் அருகதை இல்லை என முரசொலி வழியாக திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.    

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com