அமெரிக்காவுடன் இந்தியா எச்சரிக்கையாக இருக்குமாறு முன்னாள் ராணுவ தளபதி பிக்ரம் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
பொருளாதார மாநாடு:
எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டின் போது, முன்னாள் ராணுவ தளபதி பிக்ரம் சிங் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எச்சரிக்கை:
குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிக்ரம் சிங். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுடனான தனது உறவை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது என்று கூறிய அவர் எப்போதும் அமெரிக்காவுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ஏனெனில் அமெரிக்கா ஒருபோதும் நட்பு நாடுகளுடன் நம்பகமானதாக இருந்தது இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குவாட் அமைப்பு:
குவாட் 2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவால் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும். பின்னர் நான்கு நாடுகளின் கூட்டாக வடிவம் பெற்றது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச ஒழுங்கை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கும்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஆளுநருடனான இபிஎஸ் சந்திப்பின் உண்மையான பின்னணி என்ன?!