மயில்சாமியின் மரணம் குறித்து தவறான செய்தி அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை.... தந்தையின் இறப்பைக் குறித்து விளக்கம் அளித்த மகன்கள்!!!

சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். 
மயில்சாமியின் மரணம் குறித்து தவறான செய்தி அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை.... தந்தையின் இறப்பைக் குறித்து விளக்கம் அளித்த மகன்கள்!!!
Published on
Updated on
2 min read

அப்பா மறைவின் போது அவர்களுக்கு  உறுதுணையாக இருந்த அனைவருக்கும், ஊடகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் மயில்சாமியின் மகன்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்ததாகவும் உடனிருந்த தான் விளக்கமளிப்பதாகவும் கூறி அன்று நடந்ததைக் குறித்து விளக்கமளித்துள்ளார் மூத்த மகன் அன்பு.  கேளம்பாக்கம்அருகிலுள்ள மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு அப்பாவுடன் இவர்களும் 7.30 மணியளவில் சாப்பிட்டு சென்றதாகவும் இரவில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இரவு 2.30மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் வீட்டிற்கு வரும் வழியில் பேசிக்கொண்டே வந்ததாகவும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியில் செய்தி பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.  பின்னர் உறங்கச்சென்ற பின் 10 நிமிடத்தில் அம்மா அழைத்ததாகவும், மூச்சு விட அப்பாவிற்கு சிரமமாக இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் திடீரென மேல் சாய்ந்து விட்டதால் தொடர்ந்து அவரால் கார் ஓட்ட இயலவில்லை எனவும் கூறிய அவர் பின்பு ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.  ஆனால் மருத்துவமனையில்பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும் இருந்தபோதும் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று நினைத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றதாகவும் அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

தர்மம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்று அப்பா சொல்வார் எனக்க் கூறிய அன்பு தர்மம் எங்குள்ளதோ அங்கு எம்.ஜி.ஆர், என் அப்பா, விவேக் ஆகியோர் உள்ளார்கள் என அவர்கள் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் அப்பா விட்டு சென்றதை  நானும் என் தம்பியும் தொடர்வோம் எனவும் அவரின் செல்போன் அணைத்து வைக்கப்படவில்லை எனவும்  அவர்கள் அதை பயன்படுத்துவதாகவும் அவர் செய்த பணிகளை தொடர்ண்டு செய்வோம் எனவும் கூறியுள்ளார்.  

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு காலை 6மணிக்கு கால் செய்ததாகவும் அப்போது அவரை தொடர்புக்கொள்ள இயலவில்லை எனவும் பின்னர் அவர் வருவதாக சொல்லி நேரில் சந்தித்து எங்களுக்கு ஆறுதல் கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்பா கொடுப்பதை நிறுத்தி விட்டார் எனினும் அப்பா என்ன செய்தாரோ அதை நாங்களும் செய்வோம் எனவும் அப்பவுடைய மொபைல் எண் அணைத்து வைக்கமாட்டோம் எனவும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் எனவும் எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்வோம் எனவும் கூறியுள்ளார்.

தினமும் 4 மணி நேரம் தான் தூங்குவார் எனவும் பிறக்கு என்ன உதவி செய்யலாம் என யோசிப்பார் எனவும் கூறிய அவரது மகன் அன்பு சில யூடூயூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும், தொடர்ந்து இதுபோல தவறான செய்திகளை பரப்பினால்  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com