சென்னை உயர்நீதிமன்றத்தில் குறைந்த காலிப்பணியிடங்கள்....!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் குறைந்த காலிப்பணியிடங்கள்....!!
Published on
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற  வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணன் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொலிஜியம்:

கடந்த 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க  கொலிஜியம் பரிந்துரை செய்தது. 

பரிந்துரைக்கப்பட்டோர்:

இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும்,  வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணன், லக்‌ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஐந்து வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. 

பதவியேற்றோர்:

இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி,ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதை அடுத்து பிப்ரவரி 7ம் தேதி பதவியேற்றனர். 

குடியரசுத்தலைவர்:

இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணனை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார். இவருக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். 

குறைந்த காலியிடங்கள்:

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com