விளையாட்டு

தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

செஸ் வீரர்கள் ஒவ்வொருவரின் மிகப் பெரிய கனவு என்பது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதுதான். ஆனால், சர்வதேச செஸ் அரங்கை பொருத்தவரை ஆண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதை விட பெண் வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பெண் செஸ் வீராங்கனைகள் இதுவரை 41 நபர்கள் மட்டுமே பட்டம் பெற்றுள்ளது குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில்தான், தமிழக வீராங்கனை வைஷாலி செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது பெண் வீராங்கனையும், தமிழகத்தில் முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 

செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்று தகுதிகளைப் வைஷாலி பெற்றிருந்த நிலையில், கிளாசிக் செஸ் போட்டியில் இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து கிராண்ட் மாஸ்டராக வளர்ந்துள்ளார். இந்தியாவின் கோனேரு ஹம்பி,  ஹரிகா ஆகியோரைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலி பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.