விளையாட்டு

இந்தியா VS இலங்கை: 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்த ரன்கள் எவ்வளவு?

Tamil Selvi Selvakumar

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணிக்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.

சதம் அடித்த விராட் கோலி:

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில், மூன்று சிக்சர்களை பறக்கவிட்ட ரோகித் ஷர்மா 67 பந்துக்கு 83 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார். அதேபோன்று விராட்கோலி 87 பந்துக்கு சதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதேபோல், சுப்மன் கில் 60 பந்துக்கு 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இலக்கை நிர்ணயித்த இந்திய அணி:

இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுத்து ஆடிய இந்திய அணி வீரர்கள், 50 ஓவர் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்து இலக்கை நிர்ணயித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்து களமிறங்கவுள்ள இலங்கை அணி, 50 ஓவர்களில் 374 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.