விளையாட்டு

பரப்பரப்பான கடைசி நிமிடங்கள்......கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா....

Malaimurasu Seithigal TV

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி கிராஸ் ஓவர் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.

உலகக் கோப்பை:

15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடந்து வருகிறது.  இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை தோற்கடித்தது.  இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை கோல் இன்றி டிரா செய்தது.  இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் வேல்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.  

பரப்பரப்பான நிமிடம்:

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயன்றன. இந்த நிலையில், இந்திய அணி 21-வது நிமிடத்தில் தமது முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.  அடுத்ததாக 32-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை இந்திய அணி பதிவு செய்தது.  

பதிலடி:

இதற்கு பதிலடியாக 42 மற்றும் 44-வது நிமிடத்தில் வேல்ஸ் அடுத்தடுத்து கோல்களை பதிவு செய்தது.  

கடைசி நிமிடத்தில்:

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் 45 மற்றும் 59-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் பதிவு செய்தது.

வெற்றி:

இதன் மூலம் 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப்-டி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.  இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் 22ஆம் தேதி விளையாட உள்ளது.

-நப்பசலையார்