அரசுக்கு எதிராக போராட்டம்... உயர்ந்த பலி எண்ணிக்கை....

அரசுக்கு எதிராக போராட்டம்... உயர்ந்த பலி எண்ணிக்கை....

பெரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. 

தென் அமெரிக்க நாடான பெருவில், அதிபர் பெட்ரோ கேஸ்டிலோ ஊழல் செய்ததாக கூறி  எதிர்கட்சியின் தீர்மானத்தால் அதிபா் பதவியிருந்து நீக்கப்பட்டார்.  இந்நிலையில் அவரது ஆதரவாளா்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அந்நாட்டு காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைத்தனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பாஜகவின் ஒன்றரையணா வோட்டுக்கும் வேட்டா.....