சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியானது கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் பல மாநிலங்களில் இருந்து பங்கு பெறுவதற்காக பள்ளி கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இறுதி போட்டியானது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கேசவ் முடேல் என்கிற நபருக்கும் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த யோரா டாடே என்ற வீரருக்கும் இடையே குத்து சண்டை போட்டி நடைபெற்றது. இதில் கேசவ் முடேல் என்பவர் யோரா டாடேவை தலையில் தாக்கி இருக்கிறார். அப்பொழுது மயக்கம் அடைந்த யோராவிற்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதன் பிறகு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சையும் மருத்துவர்கள் மேற் கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக கொளத்தூர் பகுதியை சேர்ந்த கிக் பாக்சிங் அசோசியேசன் சேர்மன் சுரேஷ் பாபு என்பவர் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்படுமா அமலாக்கதுறை!!!!!