தாய்லாந்து வளைகுடாவில் பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் காரணமாக ராயல் தாய் கடற்படையின் HTMS சுகோதை கார்வெட் கப்பல் மூழ்கியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தாய்லாந்து கடற்படையின் கப்பல் ஒன்று நேற்று கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பிரசுவாப் கெரி கான் மாகாணத்தில் உள்ள பாங்சாஃபான் மாவட்டத்தில் உள்ள ஜெட்டி பகுதியில் இருந்து 32 கி.மீ தொலைவில் கடலில் போர்க்கப்பலான சுகோதை கார்வெட் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகவே புயல் அதிக அளவில் காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, கப்பல்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலவரப்படி படகில் இருந்தவர்களில் 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
-நப்பசலையார்