கேசிஆர் நடத்துவது சர்வாதிகார ஆட்சியா?  காங்கிரசின் குற்றச்சாட்டு என்ன?

கேசிஆர் நடத்துவது சர்வாதிகார ஆட்சியா?  காங்கிரசின் குற்றச்சாட்டு என்ன?

சமீபத்தில் அமைக்கப்பட்ட தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர். உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், உள்ளாட்சி தலைவர்களை ஓரங்கட்டுவதாக கட்சி தலைமை குற்றம்சாட்டியுள்ளது.

தொடரும் ராஜினாமா:

காங்கிரஸில் ராஜினாமா என்பது தொடர்கதையான ஒன்று.  தற்போது அது தெலுங்கானாவிலும் தொடர்கிறது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.   இங்கு சமீபத்தில் அமைக்கப்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 12 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், உள்ளாட்சி தலைவர்களை ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

குற்றச்சாட்டுகள் என்ன?:

காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் 50% க்கும் அதிகமானோர் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த தலைவர்கள் என்று ராஜினாமா செய்த உறுப்பினர்களில் ஒருவரான உத்தம் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.  இதனால் கடந்த 6 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் தெலுங்கானாவில் கேசிஆர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாகவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற கடும் போராட்டம் தேவை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சரிசெய்யுமா என்பதும் விரைவில் தெரியும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உலகை தாக்கி அழிக்கும் ஏவுகணை... உலகை மிரட்டும் ரஷ்யா...!