உலகை தாக்கி அழிக்கும் ஏவுகணை... உலகை மிரட்டும் ரஷ்யா...!

உலகை தாக்கி அழிக்கும் ஏவுகணை... உலகை மிரட்டும் ரஷ்யா...!
Published on
Updated on
1 min read

ரஷ்யா உக்ரைனை ஏவுகணை மூலம் தாக்கி அதை முற்றிலுமாக அழித்தது.  ரஷ்ய ஏவுகணைக்கு பலியாகாத பெரிய கட்டிடம் எதுவும் உக்ரைனில் இல்லை.  

எந்த மூலையிலிருந்தும்..:

அதே நேரத்தில், ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் அவன்கார்ட் ஏவுகணை அமைப்பை ஓரன்பர்க் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.  இந்த ஏவுகணை தொடர்பாக, ரஷ்யா தனது இலக்கை உலகின் எந்த மூலையிலும் 30 நிமிடங்களில் தாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விட 27 மடங்கு அதிவேக வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் மேலும் இது எந்த திசையிலும் எந்த உயரத்திலும் தாக்கக்கூடியது என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணை:

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 33076 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.  அவன்கார்ட் ஏவுகணையின் எடை சுமார் 2000 கிலோ.  அதே நேரத்தில், அவன்கார்ட் ஏவுகணை ஒரு நொடியில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும்.  

ரஷ்யா கூறுவதென்ன?:

அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆயுதங்களை மேம்படுத்தியுள்ளது என்று செர்கா கரகேவ் கூறியுள்ளார்.  அதே நேரத்தில், ரஷ்யாவைத் தவிர, உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற ஆயுதம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com