உலகம்

புதுப்பிக்கப்பட்டு வரும் காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட மொழிகள்!!!

Malaimurasu Seithigal TV

பிஜி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1,200 ஹிந்தி அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலகமயமாக்கல்:

மேற்கத்தியமயமாக்கலை முன்னேற்றத்தின் காலமாக கருதிய நிலை தற்போது மாறியுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட இதுபோன்ற பல மொழிகள் தற்போது உலக அரங்கில் புதுப்பிக்கப்பட்டும் மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றன எனக் கூறிய ஜெய்சங்கர் உலகமயமாக்கல் என்பது ஒரே மாதிரியான தன்மையைக் குறிக்காது மாறாக நமது பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

உலக ஹிந்தி மாநாடு:

12வது உலக இந்தி மாநாட்டை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் துவக்கி வைத்து பேசினார்.  பிஜி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1,200 ஹிந்தி அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.  

மூன்று நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் பிஜியின் தலைவர் ரது வில்லிம் கட்டோனிவேரி தவிர, இந்தியாவின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  பிஜியில் இந்திக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்