'விதியுடன் முயற்சி செய்யுங்கள்' டூ  'நம்முடைய விதியை நாமே உருவாக்குவோம்' 

'விதியுடன் முயற்சி செய்யுங்கள்' டூ  'நம்முடைய விதியை நாமே உருவாக்குவோம்' 

மத்திய அரசு 2020-21ல் பாதுகாப்பிற்கான மூலதனமாக 58 சதவீதத்தை இந்திய பாதுகாப்பு துறையில் இருந்து கொள்முதல் செய்ய ஒதுக்கியுள்ளது.  பாதுகாப்பிற்கான செலவின ஒதுக்கீடு 2021-22ல் 64 சதவீதமாக இருந்தது 2022-23ல் 68 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டிற்காக மட்டும்:

பாதுகாப்பு கொள்முதலுக்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டில் 75 சதவீதம் உள்நாட்டிற்காக மட்டும் ஒதுக்கப்படும் எனவும் அதன் மதிப்பு 1,00,000 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்தத் தொகையில் இருந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம்:

இந்தியா விரைவில் புத்தாக்கத் துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், உலகம் முழுவதும் ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுக்கும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்புத்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான  'மந்தன்' நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய ராஜ்நாத்சிங், "அடுத்த தலைமுறையில் புரட்சியை கொண்டு வர வேண்டும் என்றால், நாம் புதிய விஷயங்களை செய்ய வேண்டும் அல்லது இருக்கும் விஷயங்களை புதிய வழியில் செய்ய முயற்சிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

புதிய பாதை:

மேலும், “இதில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது.  இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 'விதியுடன் முயற்சி செய்யுங்கள்' என்ற உரை மிக முக்கியமானது.  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 'நம்முடைய விதியை நாமே உருவாக்குவோம்' என்ற பாதையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.  

சிறந்த படைப்பாளிகள்:

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக மாற வேண்டும்.  உலகின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக நாம் உருவாக வேண்டும்.  இதற்கு அம்ரித் கால் சிறந்தது.   நாட்டின் தலைவிதியை மாற்றி அமைப்பதில் இளைஞர்கள் சிறந்த படைப்பாளிகள்.” எனக் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இந்தியா- சிலி இடையே கரிம உற்பத்தியை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!!