உலகம்

அழிவின் விளிம்பில் கடல் பசுக்கள்....

Malaimurasu Seithigal TV

அரிய கடல் வாழ் உயிரினங்களான கடல் பசுக்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலூட்டி வகையைச்சேர்ந்த உயிரினமான கடல் பசுக்கள் 10 அடி நீளமும், 250 முதல் 300 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும்.  இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாகும்.  இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பட்டினி காரணமாக ஆயிரம் கடல் பசுக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கடல் பசுக்களின் உணவான கடற்புற்கள் அழிந்து வருவதே இதற்கு காரணம் என்றும், 7ஆயிரம் கடல் பசுக்கள் மட்டுமே தற்போது இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் உயிரின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்