உலகம்

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்...!!

Malaimurasu Seithigal TV

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை 2.30 மணி அளவில் புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.போர்ட் பிளேயரிலிருந்து வடமேற்கு திசையில்  510 கிமீ தூரத்திலும் காக்ஸ் பஜாரின் தென்மேற்கு திசையில் 1320 கிமீ தூரத்திலும்   சிட்வேயிலிருந்து (மியான்மர்) தென்மேற்கு திசையில் 1220 கிமீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை அதிகாலை, 2.30 மணி அளவில் படிப்படியாக புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்வதைத் தொடர்கிறது,.இது படிப்படியாக தீவிரமடைந்து மாலை 5.30 மணிக்கு தீவிர புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் பின் மத்திய வங்க கடலில் மே 12 ஆம் தேதி காலையில், அதிதீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன் பின் மே 13 முதல் சிறிது வலுவிழக்க வாய்ப்புள்ளது. மே 14 ஆம் தேதியில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைபகுதியான காக்ஸ் பஜார் (வங்காளதேசம் 30) ​​மற்றும் கியாமூருக்கு இடையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. மே 14, 2023 அன்று 1.30 மணிக்கு கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகபட்சமாக 110 முதல் 130 கி.மீ வேகத்தில் வீசப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.