கேரள மாநிலம், கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட குற்றவாளி கத்திரியால் பெண் மருத்துவரை முறை குத்தியதில் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் இன்று அதிகாலையில் கொட்டாரக்கரை போலீசார் சந்தீப் என்ற குற்றவாளியை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அப்போது மருத்துவர் சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஆவேசமான குற்றவாளி சந்தீப் அங்கிருந்த கத்திரிகோலால் மருத்துவமனையில் பணிசெய்து கொண்டிருந்த மருத்துவர் வந்தனாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் வந்தனாவின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மருத்துவமனை பணியாளர்கள் போலீசார் என 5 பேரையும் குற்றவாளி கத்தியால் குத்தியுள்ளார்.
இதை அடுத்து குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்தனர். காயம்பட்டு கிடந்த மருத்துவர் வந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவர் வந்தனா பலியானார்.
சிகிச்சைக்கு வந்த ஒரு குற்றவாளி தாக்கியதில் பெண் மருத்துவர் பலியான சம்பவம் கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவத்தை கண்டித்து கேரளாவில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மருத்துவமனையில் நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:அரசு நிரணயித்த விலை நியாயமான விலை இல்லை...உயர்நீதிமன்றம்!!