பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கடுமையாக விமர்சித்துள்ளார். இம்ரான் கானை நடிகர்களின் தலைவன் என்று வர்ணித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது, இம்ரான் கானின் காலில் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார்.
வலது காலில் காயம் அடைந்த கான்,வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் லாகூரில் உள்ள இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் மீதான தாக்குதல் வெறும் நாடகம் என்று ஃபஸ்லுர் ரஹ்மான் கூறினார். இம்ரான் கான் நடிப்புத் திறமையில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரை மிஞ்சிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இம்ரான் கானுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த சந்தேகத்தை எழுப்பிய ஃபஸ்லுர் ரஹ்மான், பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரைக் கூட இம்ரான் தனது நடிப்புத் திறமையில் விஞ்சியுள்ளார் எனக் கூறியுள்ளார்.
வசிராபாத் துப்பாக்கி சூடு நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்ட நான் ஆரம்பத்தில் இம்ரான் கான் மீது அனுதாபம் கொண்டேன் எனவும் ஆனால் இப்போது அது ஒரு நாடகமாகத் தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் காலில் பாய்ந்த தோட்டா உடைந்தது எப்படி சாத்தியம்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் ஃபஸ்லுர் ரஹ்மான்.
மேலும் வெடிகுண்டு துண்டு பற்றி தான் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர தோட்டா துண்டு பற்றி அல்ல எனத் தெரிவித்துள்ளார் ஃபஸ்லுர் ரஹ்மான்.
தொடர்ந்து பேசிய அவர் கானின் பொய்யை பார்வையற்றோர் ஏற்றுக்கொண்டனர் எனக் கூறியுள்ளார்.
கான் தாக்கப்பட்டதைக் கேள்விப்பட்டபோது, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்களும் கண்டித்தோம், ஆனால் இப்போது எனக்கும் சந்தேகம் வருகிறது என பேசியுள்ளார் ஃபஸ்லுர்.