”திமுக போன்ற சில கட்சிகள்...” விமர்சித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை!!!

”திமுக போன்ற சில கட்சிகள்...”  விமர்சித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை!!!

10 சதவீத இடஒதுக்கீட்டால், எந்த பிரிவினருக்கும் பாதிப்பு வராது என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது, 10 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், தமிழ்நாட்டில் பலர் பலனடைவார்கள் எனக் கூறினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக, திமுக போன்ற சில கட்சிகள் விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து விட்டு, அதை நடைமுறைப்படுத்தும் செயலில் திமுக அரசு ஈடுபட வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் இந்த சிறப்பான தீர்ப்பை, தமிழக பாஜக முழு மனதுடன் வரவேற்பதாகவும் கூறினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்...குற்றப்பத்திரிக்கையுடன் புல்லட் தியரியையும் தாக்கல் செய்த காங்கிரஸ்...