
குஜராத்தில் 27 ஆண்டுகாலமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வருட தொடக்கத்திலேயே தேர்தல் பிரச்சாரத்தை குஜராத்தில் தொடங்கியிருந்த நிலையில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்களாலும் தலைமையில்லாமலும் திண்டாடி கொண்டிருந்தது.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதும் அசோக் கெலாட் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் அனுப்பப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் காங்கிரஸ் பாஜக மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பாஜகவின் 27 ஆண்டுகால ஆட்சி காலத்தில் குஜராத் மிகவும் பின்தங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் பாஜக மீது பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. குஜராத் அரசின் தவறான கொள்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனவும் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடன் அதிகரித்துள்ளது எனவும் குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளது காங்கிரஸ். மேலும் ஊழல்களின் பாதையில் அரசு முன்னேறிய விதம் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவில்லை எனவும் காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர பட்டியல் இன மக்களின் பாதுகாப்பு குறித்த பெரிய பிரச்சனையையும் காங்கிரஸ் தனது குற்றப்பத்திரிகை மூலம் எழுப்பியுள்ளது. அதனோடு மோசமான சட்டம் ஒழுங்கு முறை முதல் மாநிலத்தில் உள்ள மோசமான பஞ்சாயத்து ராஜ் அமைப்பு வரையும் காங்கிரஸால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் விட்டுச் சென்ற அனைத்து வளங்களையும் இன்று பாஜக அழித்துவிட்டது எனவும் பாஜக மக்கள் அனைவருக்கும் வீடு அளிப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு வீடும் இல்லை மின்சாரமும் இல்லை என காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள எதற்கும் பாஜகவால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை எனவும் எப்போதும் அளிக்க முடியாது எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறியுள்ளார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததோடு நில்லாமல் 30 அம்ச புல்லட் தியரியையும் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக தயார் செய்துள்ளது. முதலில் குஜராத்தில் இந்த புல்லட் தியரியை வீடு வீடாக கொண்டு செல்லும் முழு முயற்சியில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
ஒரு தகவலானது எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படுவதாகும். எந்த இடையாளர்களும் இல்லாமல் ஊடகங்கள் நேரடியாக அவர்களது செய்திகளை செயலற்ற பார்வையாளர்களுக்குள் செலுத்துவதை இது குறிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட நபருக்கான தகவலானது நேரடியாக பெறுநரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வைக்கிறது இந்த புல்லட் தியரி.