உலகம்

கொலம்பியாவில் நடைபெற்ற கருப்பு வெள்ளை திருவிழா...

Malaimurasu Seithigal TV

இந்தியாவை போலவே பன்முகத்தன்மை கொண்ட மக்கள் நிரம்பிய இடம் தான் அமெரிக்கா. குறிப்பாக தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில், பல நிறத்தவர்கள், அதாவது வெள்ளை நிற அமெரிக்கர்கள், மாநிரத்தவராகிய மெக்சிக்கர்கள், கருத்த நிறமுடைய ஆப்ரிக்கர்கள் என பந்நாட்டவர்களும் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதனை கொண்டாடும் வகையில், கொலம்பியாவிலும், நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆண்டுதோறும் கருப்பு வெள்ளை திருவிழா கோலாகலத்துடன் நடைபெற்றது.

2009ம் ஆண்டு யுனெஸ்கோவின் முன்னெடுப்பால், தென் அமெரிக்க பழங்குடி, ஸ்பானிஷ் மற்றும் ஆப்பிரிக்க இனங்களை ஒன்றிணைக்கும் விழாவாக இப்பேரணி கடைபிடிக்கப்படுகிறது. ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை குறிக்கும் வகையிலும், கருப்பர் அடிமைகளின் விடுதலையை போற்றும் வகையிலும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக வண்ணங்களை பூசிக்கொண்டு ராட்சத பொம்மைகளுடன் மக்கள் பேரணியாக சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.