உலகம்

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...!!!

Malaimurasu Seithigal TV

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, கட்டிடத்தின் மேல் தளத்தில் வசிக்கும் சிலர் மொட்டை மாடி வழியாக வெளியே வந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டனில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் 38 பேர் படுகாயமடைந்த நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிக்காக பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன.  

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் அடிப்படையில் பார்க்கும் போது அடுக்குமாடி ஜன்னல்களில் மக்கள் தொங்குவதையும், தீயணைப்பு வீரர்கள் புகை நிறைந்த கட்டிடத்திலிருந்து கயிறுகளை இழுப்பதும் தெரிகிறது.

லித்தியம் பேட்டரியால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளங்களில் வசிக்கும் சிலர் கூரை வழியாக வெளியே வந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூயார்க் தீயணைப்புத் துறை ஆணையர் லாரா கவனாக் கூறுகையில், 20வது மாடியில் உள்ள அடையாளம் தெரியாத பொருளில் பயன்படுத்தப்பட்ட லித்தியம் பேட்டரியில் இருந்து தீ பரவியது எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்