திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் தேர்வு மற்றும் சாத்திய கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் படி திருச்சி மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 68 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நங்கவரத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கோரிக்கை...செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பதில் !
இந்நிலையில் இன்னும் இரு மாதங்களுக்குள் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.