தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலம்...பரிதவிக்கும் கிராம மக்கள்!

Tamil Selvi Selvakumar

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் கிராம மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார். 


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால், கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து கருப்பாக வந்துள்ளது. அத்துடன் குடிநீர் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு தூய்மையான தண்ணீரை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.