தமிழ்நாடு

இன்று ஆவணி அவிட்ட விரதம்; கோயில்களில் புனித நீராடி பூணூல் மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பூணூல் மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் ஆவணி அவிட்ட நாளில் தான், பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவர், அசுரர்கள் திருடிச்சென்ற வேதத்தை மீட்டு வந்து அவற்றை புனிதப்படுத்தியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆவணி அவிட்ட விரதத்தை பிராமணர் மற்றும் பிற குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கடைபிடித்து பூணூல் மாற்றிக் கொள்வார்கள்.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  பார்த்தசாரதி கோயில் குளத்தில் புனித நீராடிய ஆண்கள் உத்ராதி மண்டபத்தில் பூணூலை மாற்றிக் கொண்டனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது பூணூலை மாற்றிக் கொண்டனர்.

அதேபோல், ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் ஏராளமானோர் வேத மந்திரங்கள் முழங்க பூணூலை மாற்றிக் கொண்டனர்.