சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நாள்; ரக்‌ஷா பந்தன் கோலாகல கொண்டாட்டம்!

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நாள்; ரக்‌ஷா பந்தன் கோலாகல கொண்டாட்டம்!
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நாளாக வருடந்தோறும் ரக்‌ஷா பந்தன் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் நாள் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நன்றி ஜவான் என்ற இயக்கத்தை முன்னெடுக்கும் விதமாக ராக்கி கயிறுகள் தயாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளைக் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ்  படை முகாமுக்கு சென்ற மாணவிகள் அங்குள்ள வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டியும் பொட்டு வைத்தும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கயிறு கட்டியும் இனிப்புகளை வழங்கியும் ரக்‌ஷா பந்தனை கொண்டாடினர்.

அதேபோல் உத்தம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் படையினருக்கு மாணவிகள் கயிறு கட்டி ஆரத்தி எடுத்தனர். அக்னூர் பிரிவில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ராக்கி கட்டியும் திலகமிட்டும் ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com