தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இதையும் படிக்க : அமித்ஷா பெயரை ஏன் நீக்க வேண்டும்...அவரின் பெயர் என்ன தகாதா வார்த்தையா? மு.க.ஸ்டாலின் பதிலடி!
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறவுள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.