நாகாலாந்து மக்களை நாய்கறி உண்பவர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியது ஏற்றுக் கொள்ள முடியாது என்ற ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
சென்னையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்ற கலைஞர் நுற்றாண்டு விழாவில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை நாய் கறி உண்ணும் நாகாலாந்து மக்களே ஓட ஓட விரட்டியடித்ததாகவும், இப்படியிருக்க நாம் என்ன செய்வது என விமர்சித்து பேசினார்.
இதனையடுத்து, நேற்று ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் ஆர்.எஸ். பாரதியின் இந்த கூற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதில், நாகாலாந்து மக்கள் நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள் எனவும், அவர்களை திமுகவின் ஆர்.எஸ். பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது எனவும், ஏற்க முடியாதது என்றும் ஆளுநர் கூறியிருந்தார்.
மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை இப்படி காயப்படுத்தக்கூடாது எனவும், ஆர். எஸ். பாரதியை வலியுறுத்துவதாகவும் கண்டங்களை தெரிவித்திருந்தார்.
இன்னிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர். எஸ். பாரதி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாகாலாந்து மக்களை நான் இழிவு படுத்தியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி என்றும், நாகாலாந்து மக்கள் நாய் கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | “இதுதான் சனாதனம்; தீட்டு கொள்கைதான் சனாதனம்” - திருமாவளவன் விளக்கம்