தமிழ்நாடு

பேனா நினைவு சின்னம் எதிர்ப்பும்... பாலியல் தொந்தரவும்....

Malaimurasu Seithigal TV

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது தொடர்பாக அரசு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட  சுற்றுச்சூழல் பெண் ஆர்வலர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு செய்துள்ளார்.

எதிர்ப்பு காரணமா:

பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்ததன் அடிப்படையில், அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.

வேதனை:

பாலியல் தொந்தரவு குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு அலைக்கழித்து அங்கேயும் காவலர்கள் புகாரை பெறாமல் இழுத்தடித்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர், ஆய்வாளர் வீராச்சாமி, கலைச்செல்வி உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

அலைக்கழிப்பு:

புகாரை உடனடியாக பெற்று விசாரணை நடத்தாமல் 7 மணி நேரம்  அலைக்கழித்து புகாரை பெற்றதற்கான ரசீது தந்ததாக தெரிவித்துள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத்தில்:

இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பெண் ஆர்வலர் நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

தீவிர விசாரணை:

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்ததை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகள் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.