தமிழகத்தில் உள்ள கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு, ஆபாசமாக ஆடப்படுவதாகவும், அதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் அவமதிக்கப்படுவதாகவும் அறிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தினர்களை முன்னிலை படுத்தும் வகையில் தான் நாம் இது வரை பாரம்பரிய நடனங்களை ஆடியும், அவற்றைக் கண்டு ரசித்தும் வந்திருக்கிறோம். ஆனால், இன்றைய வளரும் நாகரீகத்தில், ஒரு சமூகத்தினரை மட்டும் தாக்கும் வகையில், அவர்களை அவமதிக்கும் வகையில் ஆடப்படும் இந்த் ஆடல்கள் நிறுத்தப்பட்டது நல்லது தான் என பலரும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.