ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது நீதி மன்றமே சட்டம் இயற்றலாம் - சட்ட அமைச்சர்

ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது நீதி மன்றமே சட்டம் இயற்றலாம் - சட்ட அமைச்சர்
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
ஆன்லைனில் சூதாட்டத்தில் பல தற்கொலை செய்து கொள்கிறார்கள் குதிரை ரேசை ஒழித்தது போல் ஆன்லைன் சூதாட்டமும் ஒழிக்கப்படும்.

நீதிமன்றமே சட்டம் இயற்றலாம்

மக்களுடைய நன்மைக்காக அதை தடுக்க சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம் சட்டம் இயற்ற உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்கிறார் நீதிமன்றமே சட்டம் இயற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்ததை கூட ஆளுநர் கவனிக்க தவறிவிட்டார் மீண்டும் புதிய ஆன்லைன் தடைச் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் அதன் மூலம் தமிழக மக்களை இணைய வழி சூதாட்டத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபடும் என்றும்  ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு என்று சொன்னார். அதை பல கவர்னர்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள் சட்டமன்றத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது பலருக்கு புரியவில்லை பத்து தலையுடன் வரும் ராவணனான ஒன்றிய அரசை தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் .

இந்தியாவிலேயே ஒரு புதிய எழுச்சியை உருவாக்க முடியும்
22 மாத ஆட்சிக்கு சோதனையாக ஈரோடு கிழக்குத் தேர்தல் வந்தது அதில் திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெற்றது என்றும்‌ எல்லா துறைகளிலும் மாணவர்கள் படிப்பதற்காக 7.5% உள் ஒதுக்கீடு கொடுத்தவர் தமிழக முதல்வர் என்றும் 
எடப்பாடி பழனிச்சாமி கமிஷன் கலெக்சன் கரப்ஷன் செய்வதில் மன்னன் என்றும் பேசினார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com