தமிழ்நாடு

கல்லாபெட்டி சிங்காரம் ஈபிஎஸ்...பங்கமாய் விமர்சித்த அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம்!

Tamil Selvi Selvakumar

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தனது கல்லாபெட்டியை நிரப்ப நெடுஞ்சாலை துறையையும், பொதுப்பணி துறையையும் பயன்படுத்திக் கொண்டார் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா:

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்மலை ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். 

சொன்னதை செய்த முதலமைச்சர்:

அப்போது விழாவில் பேசிய அவர், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வளர்ச்சியடைந்ததற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அவர் மேயராக இருந்தபோது சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என்று கூறினார். அதேபோல், தற்போது முதலமைச்சராக இருந்த அந்த வார்த்தையை உண்மையாக்கியுள்ளார்.

கல்லாபெட்டி சிங்காரம்:

தொடர்ந்து பேசிய அவர், கல்லாபெட்டி சிங்காரம் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, தனது கல்லாபெட்டியை நிரப்பவே நெடுஞ்சாலை துறையையும், பொதுப்பணி துறையையும் வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், கொரோனா காலத்தில் 2000 கோடியை டெண்டர் விட்டு கல்லா கட்டியவர் எடப்பாடி எனவும், முதலில் சாதாரணமாக இருந்த எடப்பாடி சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆன பிறகு, இதுவரை சசிகலாவை சந்திக்கவே இல்லை எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.