புத்தாண்டு கொண்டாட்டம்...பைக்ரேஸை தடுக்க புதுவியூகம் அமைத்த சென்னை காவல்துறை!

புத்தாண்டு கொண்டாட்டம்...பைக்ரேஸை தடுக்க புதுவியூகம் அமைத்த சென்னை காவல்துறை!
Published on
Updated on
1 min read

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரண்டுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டம்:

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான், ஏனென்றால் சிலருக்கு புது வருஷம் பிறக்க போகுது என்ற சந்தோஷம், அதே ஒரு சிலர் புது வருஷம் பிறக்க போகுது இனி ஏதாவது ஒன்ன புதுசா செய்யணும், அப்படி இல்லையா ஏதாவது ஒன்ன மாத்திக்கனும் நினைப்பாங்க, ஆனால் இளைஞர்கள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து வெளியே போவது, பார்ட்டி வைப்பது என்று அந்த நாளை அவர்கள் ஒரு விதமா கொண்டாடுவாங்க...

கட்டுப்பாடுகள் நிறைந்த கொண்டாட்டம்:

இப்படி சந்தோஷமா எஞ்சாய் பண்ண வேண்டிய நியூயரை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் என்பது மாறி, தற்போது புத்தாண்டு என்றாலே கட்டுப்பாடுகள் என்று மாறிவிட்டது.  

எச்சரித்த காவல்துறை:

இந்நிலையில், நாளை புத்தாண்டை முன்னிட்டு முழு நேர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாக  சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. இன்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், 16 ஆயிரம் காவல்துறையினா் சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், முக்கிய சாலைகளில் 300 தடுப்புகள் வைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படும் எனவும், தொடர்ந்து சென்னையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் இரவு எட்டு மணிக்கு மேலாக மூடப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

வாகனங்கள் பறிமுதல் :

மேலும் இன்று  மாலை 6 மணிக்கு மேல் இரண்டுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இருசக்கர வாகனங்களில் சென்றால், அதுவும் முக்கிய சாலைகளில் சென்றால் அவர்களுடைய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மூலமாக, முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com