தமிழ்நாடு

வரும் 23, 24 ம் தேதிகளில்...தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை...!இந்திய வானிலை மையம் சொல்வது என்ன?

Tamil Selvi Selvakumar

வங்கக் கடலில் அதே இடத்தில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி:

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2 நாட்களுக்கு கனமழை:

இதன்காரணமாக வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும், அதனால் வரும் 22 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.