சொன்னதை செய்த ஓபிஎஸ்...சூடுபிடிக்கும் அரசியல்...அப்போ விரைவில் அதுவும் நடக்கும்?

சொன்னதை செய்த ஓபிஎஸ்...சூடுபிடிக்கும் அரசியல்...அப்போ விரைவில் அதுவும் நடக்கும்?

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல்:

கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவ்ல் உட்கட்சி பூசலானது நடைபெற்று வந்தது. இந்த உட்கட்சி பூசலானது கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் மூலம் கட்சி இரண்டாக பிளவுபட்டது. இதனையடுத்து கடந்த 6 மாதங்களாக ஓபிஎஸ் ஒரு அணியாகவும், ஈபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

வேகம் காட்டி வந்த ஓபிஎஸ்:

இதனிடையே ஓபிஎஸ் புதிதாக தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை  நியமிப்பதில் வேகம் காட்டி வந்தார். 

விரைவில் பொதுக்குழு கூட்டம்:

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்:

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ரூட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் 21.12.2022 புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தி” அறிக்கை வெளியாகியுள்ளது.

சூடுபிடிக்கும் அரசியல்:

இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் சொன்ன மாதிரியே ஆலோசனை கூட்டத்தை நடத்த தேதி அறிவித்துள்ளது, விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்களிடையே பரபரப்பு பேச்சு உலாவி வருகிறது.