தமிழ்நாடு

உதய் துவக்கி வைத்த ஹாஷ்டேக்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #stophindiimposition....

#stophindiimposition என்னும் ட்விட்டர் ஹேஷ்டேக்யை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது தற்போது பெரிதாக வைரலாகி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Malaimurasu Seithigal TV

#stophindiimposition என்னும் ட்விட்டர் ஹேஷ்டேக்யை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஹிந்தி தெரியாது போடா என்ற டீ- சர்ட் அணிந்து இளைஞர் அணி மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

"இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்..   எங்கள் தாயை இழக்க மாட்டோம்" என்ற பெயர் பலகை ஏந்தி பள்ளி சீருடை அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்‌.

ஆர்ப்பாட்டத்தில், விரும்பினால் பயிலுவோம் திணித்தால் விரட்டுவோம், மக்களை சமமாக நடத்து, ஒரே தேர்வு முறையை நிறுத்து, இந்தியைத் திணிக்காதே, உரிமையை பறிக்ககாதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் கண்டன கோஷங்களை திமுகவினர் எழுப்பினார்கள்.

மேலும், #stophindiimposition என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. அதேபோல், வாசகங்கள் அடங்கிய பேனர் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு நின்று உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியை கையில் ஏந்தியவாறு புகைப்படம் எடுத்துகொண்டார்.

மேலும், இந்தி தெரியாது போடா என்னும் டீ- சர்ட் அணிந்தும், தமிழ் என குறிப்பிட்ட தொப்பி அணிந்து, பள்ளி சீருடை அணிந்து "இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்..   எங்கள் தாயை இழக்க மாட்டோம் என்ற பெயர் பலகை ஏந்தி" மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் காது, வாய் பேசமுடியாத கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இறுதியாக ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் பிடித்திருந்த பேனர்களை, பதகைகளை ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு சென்றனர்.