“வட இந்தியர்கள் பயப்படுகிறார்கள்”- கமலஹாசன்!

விக்ரம் பட நூறாவது நாள் கொண்டாட்டத்தில் பேசிய கமலஹாசன், இந்தி படங்கள் பற்றியில், அதன் ரசிகர்கள் பற்றியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

“வட இந்தியர்கள் பயப்படுகிறார்கள்”- கமலஹாசன்!

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி, உலக தியேட்டர்களில் வெளியான மாபெரும் வெற்றிப் படம் தான் விக்ரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். 

படம் வெளியான ஒரு வாரத்தில், உலக அளவில் 200 கோடி ருபாய் வசூலை அள்ளியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | “நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது” - கமல்ஹாசன்!!!

1986இல் வெளியான வெற்றித் திரைப்படம் விக்ரம். முற்றிலும் புதிய கோணத்தில் எதிர்காலத்திய படமாக உருவாக்கப்பட்ட அந்த படத்தில் விக்ரமாக உலக நாயகன் கமலஹாசன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு spin off படமாக உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய விக்ரம் படம். லோகி வெர்சில், அந்த விக்ரம் கதாபாத்திரத்திற்கு 60 வயதானால் எப்படி இருக்கும் என, சொல்லும் ஒரு கதையாக இது உருவாக்கப்பட்டது.

இந்த படம் வெளியாகி, 100 நாட்கள் தியேட்டர்களில் வெற்றி நடைபோடும் நிலையில், தற்போது கோவையில், படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், நல்ல திரைப்படங்களை என்றும் ரசிகர்கள் கைவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழ் சினிமாவின் பெருமைகளைப் பற்றிக் கூறிய அவர், “வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென்னிந்திய சினிமா பக்கம் அனைவர்களின்ன் பார்வை திரும்பிவிட்டது.” எனக் கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும் படிக்க | கமல் தயாரிப்பில் உதயநிதி; அதிரடியாக அறிவித்த உலக நாயகன்!

தொடர்ந்து பேசிய அவர், “என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன்என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்எனக்கு பிடித்த ஊர் கோவைகோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்கும் போது எனக்கு கோவிட் வந்து விட்டது. ராஜ்கமல் நிறுவனம் 53 வது படத்தை தயாரித்து வருகிறது.குறைந்த காலக்கட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன். அது பேராசை கிடையாது.” எனக் கூறினார்.

திடீரென வட இந்திய சினிமா பற்றியும் அதன் ரசிகர்கள் பற்றியும் பேசத் தொடங்கியது அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | தியேட்டர்களில் மட்டுமல்ல, ஓடிடி தளத்திலும் ரெக்கார்ட் பிரேக்! - விக்ரம் படத்தின் அடுத்த சாதனை: